ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி
தமிழ் சின்னதிரையில் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்..
தமிழில் ரச்சிதா நடித்த முதல் சீரியல் பிரிவோம் சந்திப்போம் என்றாலும், இவருக்கு பெரும் புகழும் பெருமளவு பெற்று தந்தது விஜய் டிவியில் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்த பின் தான்..
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஆக்கரமித்தார் என்றே சொல்லாம். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், சரவணன் மீனாட்சி பாகம் 3 என ரச்சிதா நடித்த சீரியல்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு தனது நடிப்பை வெளிபடுத்தி அசத்தி இருப்பார்..
சீரியல்களில் ரச்சிதா மகாலட்சுமியின் முக பாவனைகளை அடிச்சிக்க ஆலே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு அவரது நடிப்பு கதாபாத்திரத்தை ஒன்றி அமைந்திருக்கும்..
சின்னதிரையில், வெள்ளி திரை நடிகைக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்திருப்பவர் ரச்சிதா. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட கூடியவர்..
வாரம் இரண்டு அல்லது மூன்று தடவையாவது தனது போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்க கூடியவர்..
சமீபத்தில் தனது ரசிகையின் பிறந்தநாளை அவருக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரசிகையை நேரில் சந்தித்து கேக் வெட்டி, பிறந்தநாள் வாழ்த்து கூறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..
இது குறித்து ரச்சிதா மகாலட்சுமி கூறி இருப்பது :
நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற இந்த குட்டி ஜீவனுக்கு ஒரு குட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..
இனிமேல் நான் இருக்கற வரைக்கும் உன் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாய் கொண்டாடுவேன் கவலைபடாதே இது சத்தியம் நான் இருக்கேன் இப்படியே இரு என தன் ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி..